Home Local news பெண்ணொருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேக நபர் விளக்கமறியலில்

பெண்ணொருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேக நபர் விளக்கமறியலில்

more news

திருகோணமலை, கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பெண்ணொருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபர் ஒருவரை அடுத்த மாதம் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் விசானி தேனவது இன்று (22) உத்தரவிட்டார்.

லைட் வீதி, கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் கந்தளாய் பகுதியிலுள்ள திருமணமான பெண்ணொருவரை கணவன் இல்லாத சந்தர்ப்பத்தில் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கணவனால் கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனை அடுத்து பொலிஸார் சந்தேக நபரை கைது செய்து கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். பாதிக்கப்பட்ட பெண் வைத்திய பரிசோதனைக்காக கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  முகக்கவசம் இன்றி வெளியே வந்தால் பிடியாணை இன்றி கைது!
Previous articleவல்வெட்டித்துறை நகரசபையில் கூட்டமைப்பு ஆட்சியை இழந்தது!
Next articleஇலங்கை முழுவதும் ஆயுதம் ஏந்திய படையினர்