Home Astology இன்றைய ராசி பலன் 22.09.2021

இன்றைய ராசி பலன் 22.09.2021

more news

பிலவ வருடம் புரட்டாசி 6 ஆம் தேதி செப்டம்பர் 22,2021 புதன்கிழமை. துவிதியைத் திதி முழுநாள், ரேவதி முழுநாள். சந்திரன் இன்றைய மீன ராசியில் பயணம் செய்கிறார். சிம்ம ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை. புதன்பகவான் ஆசி நிறைந்த புதன்கிழமையான இன்றைய தினம் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் பரிகாரங்களைப் பார்க்கலாம்.

மேஷம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு 12ஆம் வீடான விரைய ஸ்தானத்தில் சந்திரன் பயணம் செய்கிறார். இன்று எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்தால் மட்டுமே வெற்றி காண முடியும். உறவினர்கள் வீட்டு விஷேசங்களில் பங்கேற்பீர்கள். வேலையில் உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படலாம். தொழிலில் ஓரளவு முன்னேற்றம் உண்டாகும்.

ரிஷபம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு 11ஆம் வீடான லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு எதிர்பாராத திடீர் பணவரவு உண்டாகும். வீட்டில் பெரியவர்களின் ஆதரவு கிடைக்கும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

மிதுனம்

சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று உங்களுடைய வீட்டில் சுப காரியங்கள் நடைபெறும். பிள்ளைகளால் சந்தோஷம் அதிகரிக்கும். பெருமை சேர்க்கும் வகையில் நடந்து கொள்வார்கள். வேலை செய்யும் இடத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். பழைய கடன்கள் வசூலாகும். பண வரவு அதிகரிக்கும்.

READ MORE >>>  துலாம் ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்று..

கடகம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீடான பாக்ய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று பணவரவு நன்றாக இருக்கும். செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிள்ளைகளால் சந்தோஷம் அதிகரிக்கும். மன நிம்மதி உண்டாகும்.

சிம்மம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் மன உளைச்சலுடன் காணப்படுவீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களின் விஷயங்களில் தலையிட வேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் மந்த நிலை ஏற்படும். இரவு நேர பயணங்களைத் தவிர்த்து விடவும். காரமான உணவுகளைத் தவிர்த்து விடவும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகள் எதையும் செய்யாமல் இருப்பது நல்லது.

கன்னி

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். இன்று வீட்டில் பிள்ளைகளால் சுபசெலவுகள் ஏற்படும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த எதிர்ப்புகள் விலகி வருமானம் பெருகும். மன நிம்மதியும் சந்தோஷமும் ஏற்படும் நாள். நீண்ட நாள் எதிர்பார்த்திருந்த உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும்.

துலாம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். இன்று குடும்பத்தில் பொருளாதார நிலை நன்றாக இருக்கும். பிள்ளைகளிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும் தொழிலில் பணியாட்களின் ஒத்துழைப்போடு எதிர்பார்த்த லாபங்களை அடைவீர்கள். உறவினர்கள் வழியிலும் அனுகூலம் உண்டாகும்.

READ MORE >>>  இன்றைய நாள் உங்களிற்கு எப்படி

விருச்சிகம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் ஆரோக்கிய ரீதியாக மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். சுபகாரிய முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. உறவினர்கள் உதவியால் பொருளாதார நெருக்கடிகள் குறையும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும்.

தனுசு

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் பயணம் செய்கிறார். சொந்தங்களால் ஏற்பட்ட பிரச்சினைகள் நீங்கும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இன்று குடும்பத்தில் வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். உற்றார் உறவினர்களிடம் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

மகரம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் பயணம் செய்கிறார். செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் இருக்கும். இன்று புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். வேலை விஷயமாக வெளியூர் பயணம் செல்வீர்கள். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். கடன் பிரச்சினைகள் தீரும். பண வரவினால் வங்கியில் சேமிப்பு உயரும்.

கும்பம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் எல்லாம் வெற்றி அடைய உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளால் குடும்பத்தில் வீண் பிரச்சினைகள் ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் மதிப்பு மரியாதை கூடும். தொழில் வியாபாரத்தில் வருமானம் பெருகும். எட்டாம் வீட்டில் சூரியன் செவ்வாய் பயணம் செய்வதால் வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் போது கவனம் தேவை. வேகத்தைக் குறைப்பது நல்லது.

READ MORE >>>  புத்தாண்டு பலன்கள் - தனுசு ராசி

மீனம்

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்குள் பயணம் செய்கிறார். உத்தியோகத்தில் சிலருக்கு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு கிட்டும். சுபகாரியங்கள் கைகூடி வரும். இன்று பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வீடு வந்து சேரும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். புதிய வேலை தொழில் விசயமாக எடுக்கும் முயற்சிகள் வெற்றியைத் தரும். எட்டில் சுக்கிரன் பயணம் செய்வதால் விலை உயர்ந்த பொருட்களையும் பணத்தையும் பத்திரமாகப் பயன்படுத்தவும்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

Previous articleகொவிற் தொற்றுக்கு 66 பேர் பலி; இதுவரை 12284 பேர் உயிரிழப்பு!
Next articleகிண்ணியாவில் கோர விபத்து: ஸ்தலத்திலேயே உயிரிழந்த நபர்!