Home Local news தங்கச்சங்கிலி கொள்ளை; பொலிசாருடன் இணைந்து பிடித்த இளைஞர்கள்!

தங்கச்சங்கிலி கொள்ளை; பொலிசாருடன் இணைந்து பிடித்த இளைஞர்கள்!

more news

வவுனியாவில் வீதியால் சென்ற பெண் ஒருவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை அறுத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பியோடிய இளைஞர் மடிக்கிப் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இன்று (21) பகல் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வவுனியா, உக்குளாங்குளம் பகுதியில் கடைக்கு சென்று விட்டு வீதியால் நடந்து சென்ற பெண் ஒருவரை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர் ஒருவர், அவர் அணிந்திருந்த இரண்டரை பவுண் தங்கச் சங்கிலியை இழுத்து அறுதுக் கொண்டு தப்பியோடிய போது, குறித்த பெண் கூக்குரலிட்டுள்ளார்.

                                     

இதனை அவதானித்த அப்பகுதி இளைஞர்கள் குறித்த இஞைரைக் கார் ஒன்றில் விரட்டிச் சென்றதுடன், வவுனியா குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸாருக்கும் தகவல் வழங்கினர்.

இந்த நிலையில் சந்தேக நபர் வவுனியா, வேப்பங்குளம் சந்தியில் ஏற முற்பட்டபோது அங்கிருந்த வந்த பொலிஸாரும், விரட்டிச் சென்ற இளைஞர்களும் இணைந்து மடக்கிப் பிடித்து வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

மோட்டர் சைக்கிளை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ள பொலிஸார், சந்தேக நபரிடமிருந்து இரண்டரைப் பவுண் சங்கிலியையும் கைப்பற்றினர்.. மேலதிக விசாரணைகளின் பின் கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களை இம்முறையும் மக்கள் நினைவுகூர்வார்கள்
Previous articleகிழக்கு பட்டதாரிகளுக்கு வெளிமாவட்டங்களில் நியமனம்: குடும்பக் கட்டமைப்பை சீர்குலைக்கும்
Next articleகொழும்பில் பட்டப்பகலில் நடந்த திருட்டுச் சம்பவம்; காட்டுக்கொடுத்த சிசிடிவி!