Home Accident News பஸ் மோதியதில் இரண்டு பிள்ளைகளின் தந்தை பலி

பஸ் மோதியதில் இரண்டு பிள்ளைகளின் தந்தை பலி

more news

திருப்பணி சேவை பஸ் மோதியதில் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளதாக நாவலபிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

நாவலப்பிட்டி பெனிசுதுவ பிரதேசத்தை சேர்ந்த 68 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான சரத்குமார பியதாஸ என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நாவப்பிட்டியிலிருந்து கினிகத்தேனை பகுதிக்கு வந்த நாலப்பிட்டி டிப்போவிற்கு சொந்தமான திருத்தப்பணி சேவை பஸ் கினிகத்தேனை அனுரத்த பிரத்தமிக்க வித்தியாலத்திக்கு அருகிலே 19/ 09 மாலை குறித்த நபர் மீது மோதுண்டுள்ளது.

விபத்துக்குள்ளான பஸ்ஸின் சாரதி மதுபோதையில் இருந்துள்ளதுடன் விபத்து தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்காது தலைமறைவாகியுள்ளர்.

படுகாயமடைந்தவர் நாலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

தலைமைறாவாகிய பஸ் சாரதியை நாவலப்பிட்டிய.போக்குவத்து பொலிஸார் கைது செய்துள்ளதுடன் நாலப்பிட்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக நாலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  மட்டக்களப்பில் ஆடி அமாவாசை வழிபாடுகளில் பெருந்திரளான மக்கள் குழுமியமை குறித்து விசாரணை?
Previous articleசினிமா பாணியில் இலங்கை பொலிஸ் உத்தியோகத்தர் செய்த சாகச செயல்!
Next articleமின்சாரம் தாக்கி 27 வயதான இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு!