Home CRIME NEWS பெரும் குழறுபடிக்குள் 14 வயது சிறுவன் உயிரிழப்பு!

பெரும் குழறுபடிக்குள் 14 வயது சிறுவன் உயிரிழப்பு!

more news

திருகோணமலை பொது வைத்தியசாலையில் 14 வயது சிறுவன் ஒருவன் பலியான சம்பவத்தில் குழப்ப நிலை தோன்றியள்ளதாக தெரியவருகின்றது.

மூதூர் தள வைத்தியசாலையில் இருந்து அதி தீவிர பராமரிப்பு தேவை என விண்ணப்பிக்கப்பட்ட நேற்று காலை 14 வயதும் 2மாதங்களுமான முஸ்லீம் சிறுவன் ஒருவன் ICU பராமரிப்பிற்கு என குறித்த விடுதி பிரதான வைத்தியரின் பெயரில் திருகோணமலை பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு அவரிற்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

பின்னர், உயிர் ஆபத்தான நிலையில்அவர் உடனடியாக சாதாரண கொரோனா விடுதிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அங்கு அவரது நிலமை படு மோசமடைந்ததை தொடர்ந்து, கந்தளாய், அனுராதபுரம் ஆகிய வைத்தியசாலைகளில் ICU படுக்கை கேட்கப்பட்டுள்ளது.

அங்கு பராமரிப்பிற்கான கட்டில் வசதிகள் இல்லை என்றதும் கொழும்பு தேசிய சிறுவர் வைத்தியசாலையில் இடம் ஒதுக்கப்பட்டு, மாற்றத்திற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது.

ஆனால் இதற்கிடையில் சிறுவனின் உடல்நிலை நிமிடத்திற்கு நிமிடம் மோசமானதை உணர்ந்த வைத்தியர்கள் அவசர அதி தீவிர விடுதி பராமரிப்பு தேவையான நோயாளியை சாதாரண கொரோனா விடுதியில் பராமரிக்க முற்பட்ட தவறை உணர்ந்து கொண்டுள்ளனர்.

அவசர மருந்துகள் உபகரணங்கள் ஏதும் இல்லாத சாதாரண விடுதியில் அவசார பராமரிப்பை செய்ய முற்பட்ட முட்டாள் தனத்தால் சிறுவன் உயிர் நள்ளிரவு 12 மணியளவில் பிரிந்தது.

இந்நிலையில் வைத்தியசாலைக்குள் அனுமதிக்கப்பட்டு 24 மணித்தியாலங்கள் பூராணமாகாத ஒரு நோயாளியின் மரணத்திற்கான காரணத்தை அறிய கட்டாயமாக பிரேத பரிசோதனைக்காக சட்ட வைத்திய அதிகாரி சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தி இறப்பிற்கான காரணத்தை வெளிப்படுத்துவார்.

READ MORE >>>  ஒக். 2 முதல் அதிர்ஷ்டம்

ஆனால், ICU பராமரிப்பிற்கு என முத்திரை குற்றப்பட்டு அனுப்பிய சிறுவனை சாதாரண விடுதிக்கு மாற்றி அங்கு அதி திவிர பராமரிப்பை வழங்க முற்பட்டபோது ஏற்பட்ட கால தாமதத்தால் சிறுவனின் உயிர் பறிபோனது வெளிப்படையான உண்மை.

இவற்றை மூடி மறைப்பதற்காக சிறுவனின் சடலம் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்படாமல் பிரேத அறைக்கு அனுப்பியுள்ளார் என தெரியவந்துள்ளது.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

Previous articleகொவிட் சடலத்தை வீட்டுக்கு கொண்டுவந்து அஞ்சலி; கிளிநொச்சியில் பரபரப்பு!
Next articleயாழில் முக்கியஸ்தர் ஒருவர் போதைப்பொருளுடன் கைது!