Home Accident News விபத்தில் காயமடைந்த நபரை வைத்தியசாலையில் அனுமதிப்பதாகக் கூறி, காட்டுப் பகுதியில் விட்டுச் சென்ற கொடூரம் வேன்...

விபத்தில் காயமடைந்த நபரை வைத்தியசாலையில் அனுமதிப்பதாகக் கூறி, காட்டுப் பகுதியில் விட்டுச் சென்ற கொடூரம் வேன் உரிமையாளர் உட்பட 5 பேர் கைது

more news

புத்தளம் ஆனமடுவ கொட்டுக்கச்சி பிரதேசத்தில் வேன் ஒன்றினால் மோதப்பட்டு காயமடைந்த நபரை, அதே வேனில் சிகிச்சைக்கு அழைத்து செல்வதாக கூறி, காட்டுப் பகுதியில் கைவிட்டுச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு கட்டுப் பகுதியில் கைவிடப்பட்டிருந்த நபர், சுமார் 6 மணித்தியாலயங்களுக்குப் பின் மீட்கப்பட்டு புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக ஆனமடுவ பொலிஸார் தெரிவித்தனர்.

ஆனமடுவ கொட்டுக்கச்சி நீர்ப்பாசன சந்தி பகுதியை சேர்ந்த 53 வயதான ஓய்வுபெற்ற இராணுவ வீரரான சரத் பண்டார அத்தபத்து என்பவரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் விபத்தை ஏற்படுத்திய வேனின் உரிமையாளர் உள்ளிட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை (19) குறித்த ஓய்வுபெற்ற இராணுவ வீரர்; வயல் வேலைக்காக சென்றுவிட்டு பின்னர் தனது வீட்டை நோக்கிச் சென்றுகொண்டிருந்த போது ஆனமடுவ பகுதியிலிருந்து புத்தளம் பகுதியை நோக்கி பயணித்த வேன் மோதியதில் விபத்துக்குள்ளானார்.

அத்துடன், விபத்துச் சம்வபம் இடம்பெற்ற வேளை அங்கு ஒன்றுகூடிய பிரதேச மக்கள் விபத்துடன் தொடர்புடைய வேனை சூழ்ந்துகொண்டனர். இதனால், அங்கு சிறிது நேரம் அமைதியின்மை ஏற்பட்டது.

எனினும் விபத்தில் காயமடைந்தவரை சிகிச்சைக்காக புத்தளம் வைத்தியசாலைக்கு அழைத்து செல்வதாக கூறி, அதே வேனில் ஏற்றிக் கொண்டு சந்தேக நபர்கள் அங்கிருந்து சென்றுள்ளனர்.

இந்நிலையில், காயமடைந்த நபரின் உறவினர்கள் புத்தளம் மற்றும் ஆனமடுவ ஆகிய வைத்தியசாலைகளில் படுகாயமடைந்த ஓய்வுபெற்ற இராணுவ வீரர் தொடர்பில் விசாரித்தபோது, அவ்வாறு எவரும் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது.

READ MORE >>>  யாழில் இரண்டு கிராமங்கள் முடக்கம்

இதனையடுத்து இதுபற்றி புத்தளம் மற்றும் ஆனமடுவ பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

விபத்துச் சம்பவம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் அங்கு ஒன்றுகூடிய பிரதேசவசிகளில் பெண் ஒருவர் விபத்தை ஏற்படுத்திய குறித்த வேனை தனது கையடக்கத் தொலைபேசியில் படமெடுத்திருந்த நிலையில், அந்த புகைப்படம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதன்போது அந்த வேனின் இலக்கத் தகட்டை வைத்து ஆனமடுவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

இந்நிலையில், குறித்த வேன் தொடர்பிலான விபரங்கள் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் ஊடாக திரட்டப்பட்டு அதுதொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த வேன் புத்தளம் பகுதியை சேர்ந்த ஒருவருக்குச் சொந்தமானது என்பது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளதுடன் பொலிஸார் அந்நபரைக் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இதன்போது குறித்த வேன் நண்பர் ஒருவருக்கு வாடகைக்கு வழங்கப்பட்டதாகவும், வேன் விபத்துருக்குள்ளாகி இருப்பதால் அதனை சரி செய்துவிட்டு விபத்தொன்றையடுத்து நாளை கொண்டு வந்து தருவதாக அவர்கள் கூறியதாகவும் உரிமையாளர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, வேன் உரிமையாளர் வழங்கிய தகவலையடுத்து, விபத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்த பொலிஸார், அவர்களிடம் முன்னெடுத்த விசாரணைக்கமைய, காயமடைந்தவரைக் கைவிட்டு சென்ற காட்டுப் பகுதியையும் கண்டுபிடித்துள்ளனர்.

அதன்படி சுமார் 6 மணி நேரத்திற்குப் பின்னர் குறித்த காட்டுப் பகுதிக்குச் சென்ற பொலிஸார், காயமடைந்த நபரை மீட்டு புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதித்தனர். இதன்போது அவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பில் புத்தளம் தலைமையப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் பி. குமாரதாச மற்றும் ஆனமடுவ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரசன்ன குமார ஆகியோர் தலைமையில் ஆனமடுவ பொலிஸ் நிலைய குற்றப் புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜஹத் குமார , போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி சமன் குமார ஆகியோர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

READ MORE >>>  கொரோனா தொற்று!! இளம் மருத்துவரை இழந்தது இலங்கை

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

Previous articleமட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் விபத்து
Next articleதிருமலையில் முச்சக்கரவண்டி சாரதி சடலமாக மீட்பு!