Home Local news திருமலையில்கோர விபத்து; நான்கு பேர் படுகாயம்.

திருமலையில்கோர விபத்து; நான்கு பேர் படுகாயம்.

more news

திருகோணமலை-ஹொரவ்பொத்தானை பிரதான வீதி சாந்திபுரம் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் நான்கு பேர் படுகாயமடைந்த நிலையில் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து நேற்று  (19)  6.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளொன்று சென்று கொண்டிருந்தபோது பின்புறமாக வந்து கொண்டிருந்த  மோட்டார் சைக்கிள் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றதாகவும் தெரியவருகின்றது.

இவ் விபத்தின் போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் மகன் ஆகியோர்கள் படுகாயமடைந்துள்ள நிலையில் மற்றைய சைக்கிளில் பயணித்த நபரும் படுகாயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் படுகாயமடைந்த 4 பேரும் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் இதனையடுத்து மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு இருவரை அனுப்பி வைத்துள்ளதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.

இவ்வாறு படுகாயமடைந்தவர்கள் மஹதிவுல்வெவ- புபுது புற பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தையான பீ.ஜீ. சாந்த குணரத்ன (45வயது) அவரது மனைவியான பீ.ஜீ.விமலா  ரஞ்சனி (42வயது) மற்றும் மகனான ரிவிது  சதுஸ்க (15வயது) ஆகியோர் காயமடைந்துள்ளதாகவும் இதேவேளை மற்றுமொரு  மோட்டார் சைக்கிளில் பயணித்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தரான ஏ.எம்.சந்ரசேன (52வயது) ஆகியோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

இந்நிலையில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற இரண்டு சாரதிகளும் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை பேச்சாளரொருவர் தெரிவித்தார்.

ஆனாலும் குறித்த விபத்துடன் தொடர்புடைய நான்கு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் விபத்து தொடர்பில் மொரவெவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கிளிநொச்சியில் கோர விபத்து!

ஊரடங்கை பயன்படுத்தி உழைத்துவரும் பொலிசார்; திருமலையில் சம்பவம்.

திருமலை – கிண்ணியாவில் கைவிடப்பட்டுள்ள ஆண் குழந்தை.

திருகோணமலையில் நீர் வெட்டு

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

READ MORE >>>  கற்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான முக்கிய அறிவிப்பு!

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

Previous articleவவுனியாவில் மேலும் 42 பேருக்கு கோவிட் தொற்று உறுதி: 5 பேர் உயிரிழப்பு!
Next articleநீரில் மூழ்கி காணாமல் போயிருந்த இருவரின் சடலங்கள் மீட்பு