Home Local news 12 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 71 வயது தாத்தா!

12 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 71 வயது தாத்தா!

more news

பலாங்கொட பகுதியில் 12 வயதான சிறுமியை 71 வயதான தாத்தா துஷ்பிரயோகம் செய்து, கர்ப்பிணியாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய முதியவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த சம்பவம் ஹரமிட்டிகல பகுதியில் நடந்துள்ளது.

அந்த பகுதியிலுள்ள தனியார் வைத்திய நிலையத்திற்கு சென்ற சிறுமி, சில மாதங்களாக தனக்கு மாதவிடாய் நிகழவில்லையென தெரிவித்துள்ளார்.

தாயாருடன் சிகிச்சைக்கு வருமாறு வைத்தியர் கூறியதை தொடர்ந்து, தனது தாயாருடன் சிகிச்சைக்கு சென்றுள்ளார். அவர்களை பலாங்கொட ஆதார வைத்தியசாலைக்கு வைத்தியர் அனுப்பியுள்ளார்.

சிறுமிக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு 5 மாத கர்ப்பிணியென்பது தெரிய வந்தது.

இது தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தியதில், சிறுமியின் 71 வயதான தாத்தாவே பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.

சிறுமி தற்போது, பலாங்கொட ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாத்தா கைது செய்யப்பட்டு, பலாங்கொட நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார். அவர் இம்மாதம் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  பேயோட்டுவதாக கூறி மாமியையும், மருமகளையும் துஷ்பிரயோகம் செய்த பூசாரி
Previous articleசீனிக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!
Next articleயாழ். மருத்துவபீட மாணவன் மரண விவகாரம்; வெளிவராத உண்மைகள்!