Home Local news சீனிக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

சீனிக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

more news

அடுத்துவரும் இரண்டு வாரங்களுக்குள் சீனி இறக்குமதிக்கு அனுமதி அளிக்காவிட்டால் சந்தையில் சீனிக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருக்கின்றது என அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நாட்டில் கடந்த வருடம் இறுதிப் பகுதியில் சீனிக்கான இறக்குமதி வரியை 25 சதம் வரை குறைத்துவிட்டு தேவைக்கும் அதிகமானளவு சீனி நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அதன் பின்னர் சீனி இறக்குமதி செய்வதை அரசாங்கம் தடைசெய்திருந்தது.

அதன் பிரகாரம் தற்போது நாட்டில் கையிருப்பில் இருக்கும் சீனி தொகை எதிர்வரும் ஒன்றரை மாதங்களுக்கே போதுமானது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் நாட்டுக்கு ஒரு மாதத்துக்கான சீனி தேவைப்பாடு 45 ஆயிரம் மெட்ரிக் தொன்னாகும். தற்போது கைவசம் இருப்பது சுமார் 75 ஆயிரம் மெட்ரிக் தொன் வரையாகும்.

இவ்வாறான நிலையில் சீனி இறக்குமதிக்கு அனுமதி வழங்காவிட்டால் எதிர்காலத்தில் சீனிக்கு தட்டுப்பாடு ஏற்படும் சாத்தியம் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  சுயாதீன ஊடகவியலாளர் மீது பொலிஸ் கொடூர தாக்குதல்
Previous articleஆபாச காணொளிகளை இணையத்தளத்தில் வெளியிட்ட நபர் சிக்கினர்!
Next article12 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 71 வயது தாத்தா!