Home Local news ஊரடங்கை பயன்படுத்தி உழைத்துவரும் பொலிசார்; திருமலையில் சம்பவம்.

ஊரடங்கை பயன்படுத்தி உழைத்துவரும் பொலிசார்; திருமலையில் சம்பவம்.

more news

திருகோணமலை நகரில் ஊரடங்கை பயன்படுத்தி சில பொலிசார் உழைத்து வருவதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றார்கள். ஊரடங்கிற்கு மத்தியில் சிறிதாக திறந்து வியாபாரத்தில் ஈடுபட்டுவரும் கடைகளுக்கு செல்லும் குறித்த பொலிசார் கடை உரிமையாளரிடம் கடை திறக்க அனுமதி இருக்கிறதா என கேட்டு தண்டப்பணம் விதித்தால் அதிகமாக வரும் எனக்கூறி பணத்தையும், தங்களுக்குத் தேவையான பொருட்களையும் அங்கிருந்து எடுத்துச் செல்வதாகவும் தெரிய வருகிறது.

திருமலை நகரின் மடத்தடி சந்தியில் அனுமதி இன்றி வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த இளநீர் கடைக்குள் நுழைந்த குறித்த பொலிசார் கடையில் இருந்த ஒருதொகை இளநீர்களையும், முட்டைகளையும் எடுத்துக் கொண்ட பொலிசார் போதாக்குறைக்கு கடை உரிமையாளர் வீட்டுக்கு கொண்டு செல்வதற்காக வாங்கி வைத்திருந்த பால்மா மற்றும் ஏனைய பொருட்களையும் எடுத்துக் கொண்டு சென்றுள்ளதாக கடை உரிமையாளர் கவலையுடன் தெரிவித்தார்.

கடையினுடைய வருமானத்தைக் கொண்டு தமது வாழ்வாதாரத்தை நடாத்தி வருபவர்களுக்கு அரச நிவாரணங்களும் கிடைக்கப்பெறாத நிலையில் கடையை பூட்டி வைத்தால் தங்களுடைய நிலை என்னாகும் எனவும் சிறு வியாபாரிகள் கேள்வி எழுப்புகின்றனர்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  முடக்கல் நிலை நீக்கப்பட்டால் கொரோனா உயிரிழப்புகள் 16,700 ஆக அதிகரிக்கும் அபாயம்
Previous articleஅடக்க அடக்க அதிகரிக்குமே தவிர அடங்காது!
Next articleமட்டக்களப்பு – ஆயித்தியமலையில் மதுபான போத்தல்களுடன் பெண் கைது!