Home Indian news 6 வயதுச் சிறுமி வல்லுறவின் பின்னர் கொலை: தேடப்பட்டு வந்தவர் சடலமாக மீட்பு:

6 வயதுச் சிறுமி வல்லுறவின் பின்னர் கொலை: தேடப்பட்டு வந்தவர் சடலமாக மீட்பு:

more news

இந்திய தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் 6 வயதுச் சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த நபர், ரயில்வே தண்டவாளத்தில் உடல் சிதறிய நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் சயாத்பாத் பகுதியில் உள்ள சிங்கரேனி காலனியில் 6 வயதுச் சிறுமியைக் கடந்த 9ஆம் திகதி முதல் காணவில்லை. அதன்பின் மறுநாள் அந்தச் சிறுமியின் சடலம் பக்கத்து வீட்டில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிறுமி வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டதற்குப் பின் பக்கத்து வீட்டுக்காரர் பல்லகொண்ட ராஜு தலைமறைவானார்.பின்னர் அவர் தான் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டுள்ள பல்லகொண்ட ராஜுவைப் பிடிக்க ஐதராபாத் பொலிஸார் தனிப்படை அமைத்துத் தேடி வந்துள்ளனர், அவர் குறித்து தகவல் அளித்தால் ரூ.10 லட்சம் பரிசும் வழங்கப்படும் என பொலிஸார் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், ஜனாகான் மாவட்டத்தில் கான்பூர் பொலிஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் உடல் சிதறிய நிலையில் ஒரு சடலம் கிடப்பதாக பொலிஸாருக்கு அப்பகுதி மக்கள் இன்று காலை தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, பொலிஸார் சடலத்தைக் கைப்பற்றி, விசாரணை நடத்தியதில் ரயில் தண்டவாளத்தில் கிடந்தது பல்லகொண்ட ராஜுவின் உடல் எனத் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக தெலங்கானா பொலிஸ் டிஜிபி டுவிட்டரில் வெளியிட்ட தகவலில் கூறி இருப்பதாவது:-

தயவுசெய்து கவனிக்கவும். ஐதராபாத் சிங்கனேரி காலனியில் சிறுமியை வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்தவர், கான்பூர் பொலிஸ் நிலையத்துக்கு உட்பட்ட ரயில்வே இருப்புப் பாதையில் சடலமாக மீட்கப்பட்டார். அவரின் சடலத்தைக் கைப்பற்றி உடலின் அடையாளங்களை வைத்துச் சிறுமியை வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்தவர் என்பது உறுதி செய்துள்ளது எனக் கூறியுள்ளார்.

READ MORE >>>  15 வயது மகளுக்கு தந்தை கொடுத்த பரிசு

இதற்கிடையே, சிறுமி கொலை குறித்து தெலுங்கானா தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் மல்லா ரெட்டி அளித்த பேட்டியில், ‘சிறுமி வல்லுறவு கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளி சிக்கினால், அவரை என்கவுன்ட்டரில் கொல்ல வேண்டும்’ எனத் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

Previous articleதிறந்த ஓரிரு நிமிடங்களில் அலைமோதிய கூட்டத்திற்கு காத்திருந்த ஏமாற்றம்.
Next articleதிருகோணமலையில் நீர் வெட்டு