Home Local news திருமலை – உப்புவெளி இளைஞனின் மோசமான செயல்!

திருமலை – உப்புவெளி இளைஞனின் மோசமான செயல்!

கொழும்பு, நாரஹேன்பிட்டியிலுள்ள லங்கா வைத்தியசாலையின் கழிப்பறையில் இருந்து நேற்று கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

அதற்கமைய, அந்த கைக்குண்டு தொடர்பில் நேற்றைய தினம் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட இரண்டு இளைஞர்களில் ஒருவரே இந்த கைக்குண்டை வைத்துள்ளார் என தெரியவந்துள்ளதென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைக்குண்டு வைத்துவிட்டு அது தொடர்பில் அவரே தகவல் வழங்க நடவடிக்கை எடுத்ததாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அவ்வாறு துப்பு வழங்கினால் வைத்தியசாலையிடம் இருந்து பணப்பரிசு பெற்று கொள்ள முடியும் என்ற நோக்கத்தில் இந்த செயற்பாடு மேற்கொள்ளப்பட்டதென தகவல் வெளியாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கைது செய்யப்பட்டவர் திருகோணமலை உப்புவெளியைச் சேர்ந்த 26 வயது இளைஞன் எனத் தெரிய வருகிறது.

கொழும்பு தனியார் வைத்தியசாலையில் பரபரப்பு!

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  கயிற்றின் உதவியுடன் களவாடிய மூவர் கைது;
Previous articleகொவிட் தொற்றுக்கு 132 பேர் பலி; இதுவரை 11699 பேர் உயிரிழப்பு!
Next articleதமிழ் அரசியல் கைதிகளுக்கு கொலை மிரட்டல்; ஐ.நா கடும் கண்டனம்.