Home Local news பாலியல் விடுதி முற்றுகை – இரு பெண்கள் உட்பட மூவர் கைது

பாலியல் விடுதி முற்றுகை – இரு பெண்கள் உட்பட மூவர் கைது

தலங்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவத்துகொட பிரதேசத்தில், பாலியல் விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டுள்ளது எனப் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது பெண்கள் இருவர் உட்பட மூவரைத் தலங்கம பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த விடுதியை நடத்தி வந்தவர் மற்றும்  விடுதியை நடத்திச் செல்வதற்கு உதவிய பெண்கள் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கண்டி, சீதுவ மற்றும் தங்கெல்ல ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 42, 46, 39 வயதுடைய மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  வீடுகளிலேயே நீங்கள் மருத்துநீர் தயாரிக்கலாம்
Previous articleதமிழ் அரசியல் கைதிகளை மிரட்டிய இராஜாங்க அமைச்சரை பதவியிலிருந்து வெளியேற்றிய பிரதமர்
Next articleமன்னார் மாவட்டத்தில் தடுப்பூசி அட்டை பரிசோதனை ஆரம்பம்.