Home Local news சிறையில் இராஜாங்க அமைச்சரின் செயற்பாடு – ஜனாதிபதியிடம் எதிர்க்கட்சி தலைவர் விடுத்துள்ள கோரிக்கை

சிறையில் இராஜாங்க அமைச்சரின் செயற்பாடு – ஜனாதிபதியிடம் எதிர்க்கட்சி தலைவர் விடுத்துள்ள கோரிக்கை

அநுராதபுரம் சிறைச்சாலைக் கட்டடத் தொகுதியில் அரசாங்க இராஜாங்க அமைச்சரொருவரின் இழிவான மற்றும் சட்டவிரோதமான நடத்தையை, தாம் வன்மையாகக் கண்டிப்பதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கடந்த 12ஆம் திகதி அநுராதபுரம் சிறைச்சாலையில் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, தமிழ் அரசியல் கைதிகளை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தியதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்தக் கேவலமான சட்டவிரோத செயல் இலங்கை நாட்டின் அராஜக நிலைக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாகும்.

தாய் நாட்டில் வாழும் அனைத்து குடிமக்களின் மனித உரிமைகளை பாதுகாப்பதில் இந்த அரசாங்கத்துக்கு கடப்பாடு உள்ளது.

எனவே இந்த இராஜாங்க அமைச்சரை உடனடியாக பதவியில் இருந்து நீக்குமாறு ஜனாதிபதியை கேட்டுக் கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை குறித்த இராஜாங்க அமைச்சரின் செயற்பாடு தொடர்பில் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புக்களை வெளியிட்டு வருவதுடன், அவரை பதவியிலிருந்து நீக்குமாறும் கோரிக்கை முன்வைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  8 லட்சம் ரூபாய்க்கு செலுத்தப்பட்ட தடுப்பூசியால் பரபரப்பு!
Previous articleஇலங்கை விவகாரம்! – ஐ.நாவில் அதிருப்தி வெளியிட்ட பிரித்தானியா தலைமையிலான குழு
Next articleதமிழ் அரசியல் கைதிகளை மிரட்டிய இராஜாங்க அமைச்சரை பதவியிலிருந்து வெளியேற்றிய பிரதமர்