Home Local news அரசியல்வாதி ஒருவர் இவ்வாறு நடந்து கொண்டது இதுவே முதல் முறை

அரசியல்வாதி ஒருவர் இவ்வாறு நடந்து கொண்டது இதுவே முதல் முறை

அநுராதபுரம் சிறைச்சாலையில் இடம்பெற்ற  சம்பவமானது கண்டிக்கப்பட வேண்டிய விடயமெனத் தெரிவித்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், இராஜாங்க அமைச்சர் ஒருவர் நேரடியாகச் சென்று இப்படியான வன்முறைகளில் ஈடுபடுவது என்பது இதுவே முதல் தடவையாகும் எனவும் கூறினார். யாழ்ப்பாணத்தில் இன்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், சிறைச்சாலைக்கு பொறுப்பான இராஜாங்க  அமைச்சரே ஒரு துப்பாக்கியை சிறைச்சாலைக்குள் எடுத்துச் சென்று அங்கு இருக்கக்கூடிய தமிழ் கைதிகளை விரட்டுவது என்பது ஒரு மிகப் பாரதூரமான சம்பவமாகும் என்றார்.

இது சம்பந்தமாக அரசாங்கம் உடனடியாக  நடவடிக்கை எடுக்கத் தவறினால், இது போன்ற நிகழ்வுகள் வருங்காலத்தில் பயங்கரமான செயற்பாடுகளை ஏற்படுத்தி விடும் என்பதை அரசாங்கம் உணர்ந்து கொள்ள வேண்டும் எனவும், அவர் கூறினார்.

தமிழ் அரசியல் கைதிகளை தனக்கு முன் மண்டியிட வைத்த இராஜாங்க அமைச்சர்;

கைதிகளுக்கு அச்சுறுத்தல்: ’ஐ.நாவுக்கு நேராக நீட்டிய துப்பாக்கியாகும்’

கைதிகள் மிரட்டல் தொடர்பில் மனோ காட்டம்.

சிறைச்சாலைக்குள் போதையுடன் சென்ற இராஜாங்க அமைச்சருடன் சென்ற பிரபல அழகி; பரபரப்பு தகவல்

சிறையில் இராஜாங்க அமைச்சரின் செயற்பாடு – ஜனாதிபதியிடம் எதிர்க்கட்சி தலைவர் விடுத்துள்ள கோரிக்கை

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  மட்டக்களப்பில் இராணுவ வண்டி விபத்து ! இருவர் பலி ! 4 பேர் படுகாயம்
Previous articleசிறைச்சாலைக்குள் போதையுடன் சென்ற இராஜாங்க அமைச்சருடன் சென்ற பிரபல அழகி; பரபரப்பு தகவல்
Next articleஇலங்கை விவகாரம்! – ஐ.நாவில் அதிருப்தி வெளியிட்ட பிரித்தானியா தலைமையிலான குழு