Home jaffna news சாருகாவின் இழப்பிற்காக சமூக வலைத்தளத்தில் பகிரப்படும் அனுதாபங்கள்;

சாருகாவின் இழப்பிற்காக சமூக வலைத்தளத்தில் பகிரப்படும் அனுதாபங்கள்;

ஒரு டயறியுடன் (Diary) உடன் பகிர்ந்து கொண்ட விடயங்களை, அந்த டயறியில் எழுதித் தீர்த்த நேரத்திற்கு ஒரு நல்ல நண்பியிடம் அல்லது நல்ல நண்பனிடம் உனது மனக் கஷ்டத்தைக் கூறி அழுது தீர்த்திருக்கலாம்.. நிச்சயம் உனக்கொரு நல்ல ஆறுதலும், வழிகாட்டலும் கிடைத்திருக்கும்..
ஒரு நண்பனால் / நண்பியால் தரப்படும் ஆறுதலையும் வழிகாட்டலையும் விட வேறென்ன வேண்டும்..இது போன்ற விபரீத முடிவுகளைத் தவிர்ப்பதற்கு..?
ஒரு தற்கொலை முடிவுக்கு முன்னால் ஏன் இவற்றையெல்லாம் யோசிக்க முடியாமல் போனது..?
உனக்கான A/L பெறுபேறு வெளிவந்ததும் எனது மகளும் வைத்தியர் ஆகிறாள் என்ற உன் தாயின் ஆனந்தக் கண்ணீர்… எப்படியாவது என்னைக் கரை சேர்ப்பாள் என்று நிம்மதிப் பெருமூச்சு விட்ட அந்த ஜீவனைக் கண்ணீருடன் விட எப்படி முடிந்தது…?
சந்தைக்குச் செல்லும் போதும் கடைத் தெருவுக்குச் செல்லும் போதும் என் மகள் வைத்தியராவதற்குப் படிக்கிறாள் என்று பெருமிதப்பட்டுக் கொண்டு தலை தூக்கி நடக்கும் உன் அப்பாவின் நம்பிக்கையை சிதறடித்துப்போட எப்படி முடிந்தது…?
என் தங்கை மருத்துவபீடம் செல்கிறாள் என்று அன்று குதூகலத்தில் தன் நண்பர்களுக்கெல்லாம் பார்ட்டி கொடுத்த உன் அண்ணனின் சந்தோசத்தை பாதியிலே பறித்து விட உன்னால் எப்படி முடிந்தது…?
10 வருடங்களின் பின் எமது பள்ளியில் இருந்து ஒருத்தி மருத்துவ பீடத்திற்குச் செல்கிறாள் என்று நீ பெருமை சேர்த்துக் கொடுத்த பாடசாலையினதும் ஆசிரியர்களினதும் நம்பிக்கையையும் உழைப்பையும் தவிடு பொடியாக்க உன்னால் எப்படி முடிந்தது…?
தம்மால் இயலாது என்று தாமே தவறாக முடிவெடுத்து தற்கொலை செய்யத் துணியும் ஒவ்வொரு இளைய சகோதர்களும் ஒரு விடயத்தை தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்..
நீங்கள் யார் உங்கள் உயிரை அழிக்க..? நீங்கள் எத்தனை பேருக்குக் கடமைப்பட்டிருக்கிறீர்கள் தெரியுமா..? பெற்று வளர்த்த அம்மா, வளர்த்து ஆளாக்கி உழைத்துத் தந்து இரவு பகலாக வகுப்புகளுக்கு ஏற்றி இறக்கிய அப்பா, வழிகாட்டிய சகோதரர்கள், கல்விமானாக செதுக்கி விட்ட கல்விச் சமூகம், ஆசிரியர்கள்…இப்படி ஏராளம்..
அடேய்..ஒண்டுமே தேவயில்லடா.. சாக முதல் ஒண்டே ஒண்ட யோசி.. நீ செத்திட்டா உன்ன நம்பி இருக்கிற அம்மா அப்பா வயசு போன காலத்தில என்ன செய்யும்..எத்தனைபேரிட்ட கையேந்தும்..? எப்பிடியெல்லாம் ஆதரவில்லாம தவிச்சுப் போகும்…?
என்னதான் தோல்வியென்டாலும் வாழ்ந்து காட்டு.. சாகிறத விடப் பெரிய தோல்வியவா நீ அனுபவிக்கப் போறாய்..?💔
இந்தப்பதிவு தவற விடப்பட்டவளுக்காக என்பதை விட…இனி யாரும் இதுபோல் தவறான முடிவுகளால் தவறவிடப்படக் கூடாது என்பதற்காக…💔
டயறியினால் (Diary) கேட்க மட்டும்தான் தெரியும்..முதுகில தட்டி ஆறுதல் சொல்லத் தெரியாது.. ஆனால் நிச்சயமாக அது நண்பர்களால் முடியும்..நண்பர்களால் மட்டுமே முடியும்..
💛

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  திருகோணமலை சாம்பத்தீவுக்கு விஜயம் செய்த இராஜாங்க அமைச்சர்.
Previous articleகொழும்பு தனியார் வைத்தியசாலையில் பரபரப்பு!
Next articleகொவிட் தொற்றுக்கு 136 பேர் பலி; இதுவரை 11567 பேர் உயிரிழப்பு.