Home Local news வாரத்தில் 4 நாட்கள் மாத்திரம் தபால் சேவை.

வாரத்தில் 4 நாட்கள் மாத்திரம் தபால் சேவை.

தபால் நிலையங்கள் திறக்கப்படும் தினங்களை மட்டுப்படுத்துவதற்கு தபால் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

தற்போதைய கொவிட் பரவல் மற்றும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக தபால்மா அதிபர் தெரிவித்துள்ளார். அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்தார்.

வாரத்தில் 4 நாட்களுக்கு மாத்திரம் தபால் நிலையங்களை திறப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் தபால் நிலையங்களை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். எனவே, தபால் சேவைகளை பெற்றுக்கொள்வதற்காக வருகைத்தருபவர்கள் திங்கள், செவ்வாய், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் வருகைத் தந்து தபால் சேவைகளை பெற்றுக்கொள்ளுமாறு தபால்மா அதிபர் கேட்டுக்கொண்டார்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  இறுதிப் போரில் காணாமல் போனவர்கள் தொடர்பில் வெளியான புதிய தகவல்!
Previous articleயாழில் ஆலய வாசலில் உயிரிழந்த பெண்ணுக்கும் கொரோனா!
Next articleதன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்ட விசேட அதிரடிப்படை அதிகாரி