Home Local news 21ஆம் திகதிக்குப் பின்னர் நாட்டை திறக்க முடிவு?

21ஆம் திகதிக்குப் பின்னர் நாட்டை திறக்க முடிவு?

வரும் 21ஆம் திகதி ஊரடங்கானது முடிவுக்கு வரும் நிலையில் அதன் பின்னர் நாட்டை முழுமையாகத் திறப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக உத்தியோகபற்றற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவானது வரும் 21ஆம் திகதி அதிகாலை 04 மணியுடன் நிறைவுக்கு வருகின்றது.

அதன் பின்னர் நாட்டின் வழமையான செயற்பாடுகளை தொடர்வது பற்றிய பரிந்துரைகளை அறிக்கையாக முன்வைக்கும்படியும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணித்திருக்கின்றார்.

இதேவேளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக 21ஆம் திகதி அமெரிக்கா செல்லவுள்ளார்.

இந்நிலையில் அவர் அமெரிக்கா செல்லும்முன் நாடு திறக்கப்படுகின்ற தீர்மானம் வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  கோட்டா, மஹிந்தவிற்கு உடல் நலம் வேண்டி வடக்கிலிருந்து சாக்கு சாமியார் நடைபயணம்!
Previous articleநீட் தேர்வினால் தொடரும் தற்கொலைகள்!
Next articleயாழில் ஆலய வாசலில் உயிரிழந்த பெண்ணுக்கும் கொரோனா!