Home Local news இலங்கை விவகாரங்கள் தொடர்பில் மிச்சேல் பச்லெட் கவலை.

இலங்கை விவகாரங்கள் தொடர்பில் மிச்சேல் பச்லெட் கவலை.

நல்லிணக்கம், பொறுப்புக்றுல் மற்றும் மனித உரிமைகளின் நம்பகமான  முன்னேற்றங்கள் குறித்து உறுப்பு நாடுகள் மிக நெருக்கமாக அவதானம் செலுத்த வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்சேல் பச்லெட் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது கூட்டத்தொடர் இன்று திங்கட்கிழமை ஜெனீவாவில் ஆரம்பமானது. தொடக்கநாள் அமர்வில் இலங்கை தொடர்பில் ஆணையாளர் மிச்சேல் பச்லெட்டினால் வாய்மூல அறிக்கை வெளியிடப்பட்டது.

இலங்கையில் அவசரகாலச்சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளமை மற்றும் சிவில் நிர்வாகக்கட்டமைப்புக்கள் தொடர்ச்சியாக இராணுவமயப்படுத்தப்பட்டு வருகின்றமை ஆகியவை தொடர்பில் இதன்போது தனது அதிருப்தியை வெளிப்படு;த்திய ஆணையாளர்,

மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், காணாமல்போனோரின் குடும்பங்கள், ஊடகவியலாளர்கள், வைத்திய அதிகாரிகள் மற்றும் மாணவர்கள் போன்றோரை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்டுவரும் அடக்குமுறைகள் பெரிதும் கவலையளிப்பதாகவும் அவதானத்திற்குரியவை என்றும் தெரிவித்தார்.

மேலும் பயங்கரவாதத்தடைச்சட்டம் உடனடியாக மீளாய்விற்கு உட்படுத்தப்பட வேண்டியதன் அவசியம் தொடர்பில் இதன்போது வலியுறுத்திய ஆணையாளர் மிச்சேல் பச்லெட், சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா மற்றும் கவிஞர் அஹ்னாப் ஜசீம் ஆகியோர் அச்சட்டத்தின் கீழ் விசாரணைகளின்றி நீண்டகாலமாகத் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை தொடர்பிலும் அதிருப்தியை வெளியிட்டார்.

அத்தோடு காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் செயற்பாடுகளில் வெளிப்படைத்தன்மை பேணப்பட வேண்டும் என்றும் இழப்பீட்டுக்கான அலுவலகத்தின் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் இதன்போது வலியுறுத்தியமை குறிப்பிடத்தக்கது.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  நேற்றைய தினம் 198 கொவிட் மரணங்கள்; இதுவரை 7183 மரணங்கள் பதிவாகியுள்ளன;
Previous articleஒன்லைன் விளையாட்டில் இருந்து சிறார்களை மீட்க என்ன வழி?
Next articleகோட்டாபயவால் விடுதலை செய்யப்பவட்டவர்கள் தொடர்பில் மனித உரிமைகள் ஆணையாளர் கடும் அதிருப்தி.