Home Local news இலங்கை மக்களுக்கு அடுத்த பேரிடியான செய்தி!

இலங்கை மக்களுக்கு அடுத்த பேரிடியான செய்தி!

நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் தொற்று நெருக்கடிக்கு மத்தியில் கல்வி மற்றும் சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்வதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பொது சேவைகளை நடத்தி செல்ல பொது மக்களின் மாதாந்த வருமானத்தில் 5 வீதம் வரி அறவிட வேண்டும் என வர்த்தக அமைச்சர் பேராசிரியர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஒரு லட்சத்திற்கு அதிக மாதாந்த சம்பளம் பெறும் அனைவருக்கும் இந்த வரி விதிக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊடக நிகழ்வு ஒன்றில் இணைந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற சமூக நலத்துறைகளின் பராமரிப்புக்கான குறைந்தபட்ச “சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு” என கூறி நூற்றுக்கு 5 வீதம் வரி விதிக்க வேண்டும்.

வருமான மட்டத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் சராசரியாக ஒரு லட்சத்திற்கு மேல் மாத வருமானம் உள்ள அனைவரிடமிருக்கும் இந்த வரி விதிக்கப்பட வேண்டும்” என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  மாட்டு இறைச்சி விற்பனையாளரிற்கு கொரோனா!!
Previous articleஎலும்புகளை வலுவிழக்க செய்யும் விட்டமின் D குறைபாட்டை தீர்க்கும் உணவுகள்!
Next articleஎரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை!