Home Local news வெட்டுக்காயங்களுடன் வீதியில் விழுந்து கிடந்த 27 வயது இளைஞர்.

வெட்டுக்காயங்களுடன் வீதியில் விழுந்து கிடந்த 27 வயது இளைஞர்.

சப்புகஸ்கந்த – பெலென்கஹஹேன சந்திக்கு அருகில் வெட்டுக்காயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார்.

மாகொல பகுதியை சேர்ந்த 27 வயது இளைஞரொருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.

உயிரிழந்த நபருக்கும், அவரின் நண்பருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறிய நிலையில் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் வெட்டுக்காயங்களுடன் வீதியில் விழுந்து கிடந்த குறித்த இளைஞர் கிரிபத்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  மாணவிக்கு ஆபாசப்படம் அனுப்பிய குடும்பஸ்தர் : பார்த்த அதிர்ச்சியில் மாணவி வைத்தியசாலையில்!
Previous articleயாழில் 11 வயது சிறுமி எடுத்த தவறான முடிவு! பரிசோதனையில் வெளியான விடயம்
Next articleஇது கடவுள் சாபமா அல்லது கடவுள் கோபமா? தேரர் கவலை.