Home Local news குளிக்கச்சென்ற 15வயதான இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

குளிக்கச்சென்ற 15வயதான இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

மட்டக்களப்பு – ஏறாவூர் புன்னக்குடா கடலில் குளிக்கச்சென்ற 15வயதான இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (11) மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் ஏறாவூர் தைக்கா வீதியைச் சேர்ந்த – ரமீஸ் சஜாத் என்பவரே தனது ஐந்து நண்பர்களுடன் கடலில் குளித்த போது  இவ்வாறு  நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் உயிரிழந்தவரின் சடலம் பிரேதப் பரிசோதனைகளுக்காக ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  நாவலடி பகுதியில் கைக் குண்டொன்று மீட்பு
Previous articleசாதனைக்கு மேல் சாதனை படைக்கும் பாடகி யொஹானி டி சில்வா
Next articleஇரண்டு வேளை மாத்திரம் சாப்பிட்டு மக்கள் அர்ப்பணிப்பு செய்ய வேண்டும் – ஜகத் குமார