Home jaffna news யாழில், கொவிட் தொற்றுக்கு 10 நாட்களில் 62 பேர் பலி!

யாழில், கொவிட் தொற்றுக்கு 10 நாட்களில் 62 பேர் பலி!

யாழில் செப்டெம்பர் மாதத்தின் முதல் 10 நாட்களில் 62 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

அதோடு யாழ்ப்பாணத்தில் கொரோனாவால் மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளனர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற இணுவிலைச் சேர்ந்த (25 வயது) பெண் ஒருவர் இரட்டைக் குழந்தைகளை பிரசவித்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையைச் சேர்ந்த (60 வயது) பெண் ஒருவரும் பருத்தித்துறையைச் சேர்ந்த (78 வயது) ஆண் ஒருவரும் போதனா வைத்தியசாலை விடுதியில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தனர்.

மேலும், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற தொண்டமானாறு பகுதியைச் சேர்ந்த (83 வயது) ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அத்துடன் பருத்தித்துறையைச் சேர்ந்த (81 வயது) பெண் ஒருவரும் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த (82 வயது) பெண் ஒருவரும் வீட்டில் உயிரிழந்த நிலையில் தொற்று உள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.

இதற்கமைய யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 322ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  முல்லைத்தீவில் காணாமல் போனவர் சடலமாக மீட்பு (PHOTOS)
Previous articleகாதலிக்க மறுத்த பெண்ணின் கழுத்தை அறுத்த காதலன்.
Next articleமழை வேண்டி சிறுமிகளை நிர்வாணமாக்கி ஊர்வலம்!