Home Local news சட்டவிரோதமாக மாடுகளை கடத்திச்சென்ற இருவர் கைது.

சட்டவிரோதமாக மாடுகளை கடத்திச்சென்ற இருவர் கைது.

வவுனியா – குடாகச்சக்கொடிய பகுதியில் சட்டவிரோதமான முறையில் மாடுகளைக் கடத்திச்சென்ற இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹொறவப்பொத்தானையில் இருந்து வவுனியா நோக்கி வருகை தந்த கப் ரக வாகனத்தினை குடாக்கச்சக்கொடிய பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த விசேட அதிரடிப்படையினர் வழிமறித்து சோதனைகளை முன்னெடுத்தனர்.

இதன்போது குறித்த வாகனத்தினுள் சட்டவிரோதமான முறையில் மாடுகள் கடத்தி செல்லப்பட்டுள்ளமை தெரியவந்தது.

குறித்த வாகனத்திலிருந்த நபர்களைக் கைது செய்த விசேட அதிரடிப்படையினர் கடத்தலுக்குப் பயன்படுத்திய கப் ரக வாகனத்தினையும் மாடுகளையும் மீட்டு பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Gallery Gallery Gallery Gallery

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  குடும்ப பெண்கள் வாழ்க்கையில் கும்மியடிக்க நினைக்கும் மன்மத குஞ்சுகளே அவதானம்
Previous articleஇஞ்சி டீ பக்கவிளைவுகளை ஏற்படுத்துமா?
Next articleஇலங்கையில் எகிறிய ஸ்மார்ட் போன்களின் விலை!