Home Local news உள்ளாடைகளை அணியாமல் தியாகம் செய்யவும்; அசோக அபயசிங்க!

உள்ளாடைகளை அணியாமல் தியாகம் செய்யவும்; அசோக அபயசிங்க!

மக்கள் உள்ளாடைகளை அணியாமல் தியாகம் செய்யவேண்டும் இதன் மூலம் அரசாங்கத்தின் பொருளாதார கொள்கைக்கு ஆதரவளிக்கலாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபயசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அத்தியாவசியமற்ற 623 இறக்குமதி பொருட்களிற்கு 100 வீத உத்தரவாத பண வைப்பீட்டை அமுல்படுத்தும் இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

உள்ளாடைகளும் அத்தியாவசியமற்ற பொருட்களிற்குள் அடங்குகின்றன பொதுமக்கள் அவற்றை அணிவதை தவிர்க்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் எதிர்காலத்தில் உள்ளாடைகளை அணியாமல் தியாகங்களை மேற்கொள்ளவேண்டும், இதன் மூலம் நாங்கள் ஜனாதிபதியின் பொருளாதார கொள்கை திட்டத்திற்கு ஆதரவளிக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்கள் அரசாங்கத்திற்காக அந்த தியாகத்தை செய்து நேற்று முதல் உள்ளாடைகளை அணிவதை தவிர்ப்பார்கள் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  தொண்டமானாற்றில் சடலம் மீட்பு!
Previous articleயாழ். இணுவிலை சேர்ந்த இரட்டைக் குழந்தைகளை பிரசவித்த தாய் கொவிட் தொற்றால் உயிரிழப்பு!
Next articleஜனாதிபதியிடம் மன்றாடும் PTAன் கீழ் கைது செய்யப்பட்டவர்களின் உறவுகள்!