Home cinema news சுப்பர் ஸ்டார் ரஜினியின் அண்ணாத்த பெர்ஸ்ட் லுக் போஸ்ட்டர் வெளியாகியது.

சுப்பர் ஸ்டார் ரஜினியின் அண்ணாத்த பெர்ஸ்ட் லுக் போஸ்ட்டர் வெளியாகியது.

சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தின் பெர்ஸ்ட் லுக் போஸ்ட்டர் வெளியாகியுள்ளது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் ‘அண்ணாத்த’. கிராம பின்னணிக் கொண்டு உருவாகி வரும் இந்த படத்தில் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், யோகிபாபு உள்ளிட்ட ஏராளமான திரை நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வரும் நவம்பர் 4 ஆம் திகதி தீபாவளி பண்டிகையையொட்டி ‘அண்ணாத்த’ திரைப்படத்தை வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இந்நிலையில், அண்ணாத்த படத்தின் பெர்ஸ்ட் லுக் போஸ்டரை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று வெளியிட்டுள்ளனர். கெத்தா.. ஸ்டைலா ரஜினி நிற்கும் அண்ணாத்த படத்தின் போஸ்டர் ரசிகர்களை கவர்ந்து இணையத்தில் வைரலாகி வருகிறது.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  பிரியாணிக்கு ஆசைப்பட்டு ரூ.1½ லட்சத்தை இழந்த வியாபாரி!
Previous articleநால்வரை வைத்தியசாலைக்கு அனுப்பிய குடை!
Next article21ஆம் திகதி அமெரிக்கா பயணமாகிறார் ஜனாதிபதி;