Home jaffna news காதல் ஜோடியால் யாழில் கலவரம்.

காதல் ஜோடியால் யாழில் கலவரம்.

வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுப்பிட்டி கிராமத்தில் இரண்டு சமூகங்களிற்கிடையில் ஏற்பட்ட பதற்றத்தையடுத்து, இராணுவத்தினர் களமிறக்கப்பட்டு நிலைமை சுமுகமாக்கப்பட்டது.

உடுப்பிட்டியில் நேற்று இரவு இந்த பதற்றம் ஏற்பட்டது. அந்த பகுதியை சேர்ந்த வெவ்வேறு சமூகங்களை சேர்ந்த காதல் ஜோடியொன்று அண்மையில் எதிர்ப்பை மீறி திருமணம் செய்ததை தொடர்ந்து, சமூகங்களிற்கிடையில் மோதல் போக்கு ஏற்பட்டது.

நேற்று இரவு உச்சமடைந்து இரண்டு சமூகத்தினரும் முட்டி மோதிக்கொள்ளும் நிலைமையேற்பட்ட போது, வல்வெட்டித்துறை பொலிசார் நிலைமையை சுமுகமாக்க முயன்றனர்.

எனினும்,நிலைமையை கட்டுக்கடங்காமல் போகவே இராணுவத்தினர் அழைக்கப்பட்டு, நிலைமை கட்டுப்படுத்தப்பட்டது. இன்று காலையில் இரண்டு சமூக பிரமுகர்களையும் பொலிசார் அழைத்து பேசி, நிலைமையை சுமுகமாக்கியுள்ளனர்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  யாழ்ப்பாணத்தில் 27 வயது கீர்த்தனா!! இவரை எங்கு கண்டாலும் அறிவிக்கவும்!!
Previous articleகரடியின் தாக்குதலினால் நபரொருவர் படுகாயம்.
Next articleவிருப்பமில்லாத மனைவியை கட்டாயப்படுத்தி உடலுறவு கொள்வதில் தவறில்லை; நீதிமன்றம் உத்தரவு!