Home Local news ஒருதொகுதி அங்கர் பால்மா பெட்டிகள் மன்னாரில் சிக்கின!

ஒருதொகுதி அங்கர் பால்மா பெட்டிகள் மன்னாரில் சிக்கின!

மன்னார் – பஸார் பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் அங்கர் பால்மா வை பதுக்கி வைத்து வியாபாரம் மேற்கொண்ட வர்த்தக நிலையத்திலிருந்து நேற்று மாலை ஒரு தொகுதி அங்கர் பால்மா பெட்டிகளை மன்னார் மாவட்ட நுகர்வோர் அலுவலக அதிகார சபை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

மன்னார் மாவட்ட நுகர்வோர் அலுவலக அதிகார சபைக்கு நுகர்வோரிடம் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைவாக மாவட்ட நுகர்வோர் அலுவலக அதிகார சபை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

மன்னார் பஜார் பகுதியில் உள்ள பல்பொருள் விற்பனை நிலையம் ஒன்றுக்குச் சென்று சோதனைகளை மேற்கொண்ட நிலையில் குறித்த வர்த்தக நிலையத்தில் பதுக்கி வைத்திருந்த ஒரு தொகுமி அங்கர் பால்மா பெட்டிகளை மீட்டுள்ளனர்.

இந்நிலையில் மேலதிக விசாரணைகளை மன்னார் மாவட்ட நுகர்வோர் அலுவலக அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Gallery

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  கொவிட் மரணங்களை தகனம் செய்ய கட்டணம் அறவிட தீர்மானம்
Previous articleகடன் பெற்றவர்கள் குறித்து இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு!
Next articleசமூக வலைத்தளத்தில் வைரலாகிவரும் செய்தி! சம்மான்துரையா கொக்கா;