Home Local news 10 வயது சிறுவன் கொரோனாவுக்கு மரணம்.

10 வயது சிறுவன் கொரோனாவுக்கு மரணம்.

மட்டக்களப்பில் கடந்த 24 மணித்தியாலயத்தில் கொரோனாவினால் முதல் முதலில் வவுணதீவில் 10 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 43 பேருக்கு டெல்டா வேரியன் வைரஸ்சும் 4 பேருக்கு அல்பா வைரஸ்சும் கண்டறிப்பட்டுள்ளதுடன் மாவட்டத்தில் 88 வீதமானவர்களுக்கு டெல்டா வேரியன் இருக்ககூடிய சாத்தியக்கூறு இருப்பதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.

மட்க்களப்பு சுகாதார பிராந்திய சேவைகள் பணிமனையில் இன்று வியாழக்கிழமை (09) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த 24 மணித்தியாலயத்தில்  மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவரும், களுவாஞ்சிக்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவரும், ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவரும், வவுணதீவு சுகாதார அதிகாரி பிரிவில் 10 வயது சிறுவன் ஒருவர் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளதையடுத்து உயிரிழந்தோர் 264 ஆக அதிகரித்துள்ளது

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  வெளிநாட்டில் பெற்றோர்; இலங்கையில் மகன் செய்த மோசமான செயல்.
Previous articleவீட்டில் கசிப்பு உற்பத்தி செய்த பெண் கைது!
Next articleபுதுக்குடியிருப்பில் 13 பேர் மரணம்: அதிர்ச்சியில் மக்கள்!