Home Local news 11 வயது சிறுவனை துஷ்பிரயோகம் செய்த பிக்கு விளக்கமறியலில்,

11 வயது சிறுவனை துஷ்பிரயோகம் செய்த பிக்கு விளக்கமறியலில்,

மட்டக்களப்பு புன்னைக்குடா விகாரையில் பிக்குவாக படிப்பதற்காக தங்கி இருந்து வந்த 11 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட விகாரையின் பிரதம பிக்குவை எதிர்வரும் 22 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான் இன்று (08) உத்தரவிட்டார்.

குறித்த விகாரையில் பிக்குவாக படிப்பதற்காக தங்கி இருந்து வந்த 11 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட விகாரையின் பிரதம பிக்குவை கடந்த மாதம் (25) திகதி பொலிஸார் கைது செய்து ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவரை இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

இந்த நிலையில் இன்று ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது கொரோனா காரணமாக அவரை நீதிமன்றில் அழைத்துவரப்படாத நிலையில் காணொளி மூலம் அவரை எதிர்வரும் 22 ம் திகதிவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  மாணவர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகக்கூடிய நிலை ஏற்படுகிறதா?! வெளியாகியுள்ள தகவல்.....
Previous articleமுச்சக்கரவண்டி – மோட்டார் சைக்கிள் மோதி கோர விபத்து!
Next articleகொவிட் தொற்றுக்கு 185 பேர் பலி; இதுவரை 10689 பேர் உயிரிழப்பு!