Home Local news தாயின் இறப்பை தாங்கிக் கொள்ளாத மகன் தற்கொலை; வெள்ளவத்தையில் சம்பவம்.

தாயின் இறப்பை தாங்கிக் கொள்ளாத மகன் தற்கொலை; வெள்ளவத்தையில் சம்பவம்.

வெள்ளவத்தையில் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொறியியல் துறையில் கல்வி கற்கும் 26 வயதான மகன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

வெள்ளவத்தை – மகேஷ்வரி வீதி பகுதியில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.

அவரின் தாயின் மரண செய்தியை தாங்கிக்கொள்ள முடியாமல் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மகேஷ்வரி வீதியில் வசித்து வந்த தாயொருவர் மாரடைப்பு காரணமாக களுபோவில வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த தகவலை மூத்த சகோதரன் வீட்டிலிருந்த தனது இளைய சகோதரனுக்கு தொலைபேசி மூலம் தெரியப்படுத்தியுள்ளார். இதனால் மனமுடைந்த இளைய சகோதரன், வீட்டின் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

தற்கொலை செய்து கொண்டவரின் தாயின் மீது அளவுகடந்த அன்பு கொண்டிருந்ததாக அவரது மூத்த சகோதரன் பொலிஸ் விசாரணையின் போது தெரிவித்துள்ளார்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  கொவிட் தொற்றுக்கு 84 பேர் பலி; இதுவரை 12022 பேர் உயிரிழப்பு!
Previous articleவாட்ஸ்ஆப் பாவனையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!
Next articleதிருகோணமலை மாவட்டத்தில் கடந்த 6 நாட்களுக்குள் 28 பேர் மரணம் – 846 தொற்றாளர்கள் அடையாளம்.