Home Local news அம்பலமான அதிகாரியின் பாலியல் சேஷ்டைகள்!

அம்பலமான அதிகாரியின் பாலியல் சேஷ்டைகள்!

மட்டக்களப்பு மண்முனை மேற்கு கோட்டக் கல்வி அலுவலகத்தில் 58 வயதான அதிகாரி ஒருவர் தொடர்பில் பலரும் விசனங்களை வெளியிட்டுள்ளனர். குறித்த அதிகாரி ஒழுக்கக் கேடானவர் என்றும், பெண் அதிபர்கள் மற்றும் ஆசிரியைகளை தனது அதிகாரத்தினால் அவர் துஸ்பிரயோகம் செய்வதாகவும் கூறப்படுகின்றது.

குறித்த நபர் ஏறாவூர்பற்றுக் கோட்டத்தில் 2012 ஆம் ,2020 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் பணியாற்றும்போது வெளிப்படையாகவே ஒரு பெண்ணதிபர், மற்றும் ஒரு இளம் ஆசிரியை ஆகியோருடன் தகாத உறவில் இருந்ததாகவும் கூறப்படுகின்றது.

இது தொடர்பாக முறைப்பாடுகள் வலயக்கல்வி அலுவலகம்,மாகாணக்கல்வித்திணைக்களம் வரை சென்றபோது அவரை வெறும் இடமாற்றத்துடன் பாதுகாத்த பெருமை அன்றைய காலத்தில் கல்விப்பணிப்பாளராக இருந்தவரையே சாரும் எனவும் விசனம் வெளியிடப்பட்டுள்ளது.

அதே போல் ஒழுக்கம் கெட்ட,தப்பான சிலரை தனது கதிரை இருப்புக்காக கைக்குள் போட்டு தனது சுயநலத்தேவைக்காக வளர்த்தவர் முன்னர் இருந்த கல்விப்பணிப்பாளர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அதிகாரி கிஸ்புல்லா ஆளுனராக இருந்தபோது மாகாணப்பணிப்பாளர் போன்றவர்களின் கால்களைப் பிடித்து அப்பதவிக்கு வந்தவர் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவர் தப்பானவழியில் வந்ததால் பல தப்பானவர்களைத் தனது இருப்புக்காக வளர்த்தவர் என்றும், அதில் ஒருவரே இவ்வாறான தகாத நடத்தையில் ஈடுபட்ட மண்முனை பகுதிக்கு பெறுப்பான கல்வி அதிகாரி எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் தன்னைப் பாதுகாப்பதற்காக அரசாங்க இராசாங்கத்தின் அடிவருடியாகவும் குறித்த அதிகாரி இருப்பதாகவும் குறித்த நபருக்கு அதிபர் பதவியோ அல்லது அதிகாரி பதவியோ அவரின் திறமையால் கிடைக்கவில்லை எனவும்   சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை தற்போதுள்ள வலயப்பணிப்பாளர் திறமைசாலி என்பதுடன், அர்ப்பணிப்பாகப் பணியாற்றி வருகிறார் என்றும், வலயம் உயர்தரப் பரீட்சையில் 5வலயங்களில் முதலிடம் பெற்றுள்ளதாகவும் இவரைப் போன்றவர்கள் நம் சமூகத்திற்கு தேவையானவர்கள் எனவும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

READ MORE >>>  யாழில் மூவரிற்கு கொரோனா தொற்று!!

அத்துடன் இவ்வாறான நல்லவர்கள் உள்ள அலுவகத்தில், தகாத நடத்தையுடையவர்களை உடனடியாக வெளியேற்றி , அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்குமாறும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

Previous articleகொவிற்றுக்கு 184 பேர் பலி; இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10504 ஆக அதிகரிப்பு!
Next articleசேலையில் சிக்கி சிறுமி பலி!