Home jaffna news சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர் மறுநாள் உயிரிழப்பு; யாழில் சம்பவம்.

சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர் மறுநாள் உயிரிழப்பு; யாழில் சம்பவம்.

கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு யாழ். பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் வசிக்கும் ஒருவருக்குக் கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 10 நாள்கள் சிகிச்சையளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து அவர் குணமடைந்ததாக கூறி நேற்றுமுன்தினம் வீடு செல்ல அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில், அவர் வீட்டில் சுயதனிமைப்படுத்தலில் இருந்த வேளை நேற்று திடீரென உயிரிழந்துள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.

இதேவேளை, கைதடி முதியோர் இல்லத்தில் பராமரிக்கப்பட்டு வந்த 85 வயதுடைய பெண் சாவகச்சேரி வைத்தியசாலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.

அவருக்கும் கோவிட் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  நிர்வாண பாலியல் வீடியோ: நடந்தது என்ன?
Previous articleவிறகு வெட்டச் சென்ற 25 வயது யுவதியை காணவில்லை!
Next articleவாகன விபத்தில் இளைஞர் உயிரிழப்பு!