Home Ampara news டொல்பின்கள் கரையொதுங்கின

டொல்பின்கள் கரையொதுங்கின

முந்தல் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பூனைப்பிட்டி கடற்கரையோரத்தில் நேற்று (05) இரண்டு டொல்பின்கள் உயிருடன் கரை ஒதுங்கியுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

நேற்று மாலை 4.30 மணியளவில் இரண்டு டொல்பின்கள் உயிருடன் கரையொதுங்கியதாக பிரதேச மீனவர்கள் கடற்படையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து அங்கு வருகை தந்த கடற்படையினர் பிரதேச மீனவர்கள் மற்றும் பொதுமக்களின் உதவியுடன் சுமார் இரண்டு மணி நேரத்துக்குப் பின்னர் அந்த இரண்டு டொல்பின் மீன்களையும் கடலுக்குள் விட்டனர்.

சுமார் எட்டு மற்றும் ஆறு அடி நீளம் கொண்ட இரண்டு டொல்பின் மீன்களே இவ்வாறு கரையொதுங்கியதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  இரணைதீவில் கவனயீர்ப்பு போராட்டம்
Previous articleகிழக்கு மாகாணத்தில் இதுவரை 720 கொவிட் மரணங்கள்.
Next article’மக்களை ஒடுக்குவதற்கே அவசரகால சட்டம்’