Home Local news முச்சக்கர வண்டியை அலங்கரிக்க கட்டுப்பாடுகள்!

முச்சக்கர வண்டியை அலங்கரிக்க கட்டுப்பாடுகள்!

இலங்கையில் முச்சக்கரவண்டி உரிமையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பொன்று வழங்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் பொது மக்களுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் சில சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு முச்சக்கரவண்டிகளை அலங்கரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

முச்சக்கரவண்டிகளை அலங்கரிப்பது தொடர்பான சில சட்ட திருத்தங்களுடன் கடந்த ஆகஸ்ட் 14ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரிடையே கலந்துரையாடலொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது குறித்த விடயம் தொடர்பில் பிரதமரிடம், முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் கலந்துரையாடிய நிலையில் குறித்த அனுமதி வழங்கப்பட்டதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம குறிப்பிட்டுள்ளார்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  Covid 19 வேலைவாய்ப்புக்கள்
Previous articleயாழில். உதவியவருக்கு நேர்ந்த கதி!
Next articleஅவசரகாலச் சட்டத்துக்கு 132 ஆதரவு; 51 எதிர்ப்பு.