Home jaffna news யாழில் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஒருவர் இடையில் மரணம்!

யாழில் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஒருவர் இடையில் மரணம்!

உடல் சுகவீனம் காரணமாக நோயாளர் காவு வண்டி மூலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பெண்ணொருவர் இடைவெளியில் மரணித்த சம்பவம் ஒன்று இன்றையதினம் பதிவாகியுள்ளது.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

குறித்த பெண் கடந்த இரண்டு தினங்கள் மூச்சு எடுப்பதற்கு சிரமப்பட்ட நிலையில் இன்று நோயாளர் காவு வண்டி மூலம் சங்கானை பிரதேச வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அழைத்துச் செல்லப்படும் வழியில் உயிரிழந்ததால் அவரது பிரேதம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

அவரது சடலம் மீதான பி.சி.ஆர் பரிசோதனையின் பின்னர் இவ் மரணத்துக்கான காரணம் கோவிட்  வைரஸ் தொற்றா அல்லது வேறு காரணங்களா என கண்டறியப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பெண் மூளாய் வேரம் பகுதியைச் சேர்ந்த நாற்பத்தி ஏழு வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  வெடிமருந்து தயாரிப்பில் அசம்பாவிதம்; தம்பதி படுகாயம்
Previous articleசிறுவர்கள், இளைஞர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
Next articleபொலிஸாரைக் கண்டு தப்பி ஓடிய இளைஞன் தவறி கிணற்றில் விழுந்தார்!