Home Local news கொவிட் தொற்றுக்கு 189 பேர் பலி; இதுவரை 10140 பேர் உயிரிழப்பு!

கொவிட் தொற்றுக்கு 189 பேர் பலி; இதுவரை 10140 பேர் உயிரிழப்பு!

நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் இதனை உறுதிப்படுத்தினார்.

நேற்றைய தினத்தில் மாத்திரம் நாட்டில் மேலும் 189 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 10,140 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 462,023 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 384,557 ஆக அதிகரித்துள்ளது.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  அரச வாகனங்கள் தொடர்பான தகவல்கள் பிரதமரால் அமைச்சரவையில் சமர்ப்பிப்பு!
Previous articleவிடுதலைப்புலிகளின் மொழி பெயர்ப்பாளர் ஜோர்ஜ் மாஸ்டர் காலமானார்!
Next articleசிறுவர்கள், இளைஞர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!