Home Indian news மயக்க மருந்து கொடுத்து வல்லுறவுக்குட்படுத்தியதாக மாமனார் மீது மருமகள் புகார்;

மயக்க மருந்து கொடுத்து வல்லுறவுக்குட்படுத்தியதாக மாமனார் மீது மருமகள் புகார்;

மயக்க மருந்து கொடுத்து தன்னை தொடர்ந்து பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக மாமனார் மீது மருமகள்  தமிழகத்தின் வேலூர் மாவட்ட  பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பொண்ணை பகுதியிலுள்ள ஒட்டநெரி கிராமத்தைச் சேர்ந்த  கணவரால் கைவிடப்பட்டவர் லட்சுமி. இவருக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். லட்சுமியின் மூத்த மகள் சோனியாவை  ஆந்திரா மாநிலம் ராமாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற இராணுவ வீரர் ஸ்ரீராமுலு என்பவருடைய மகன் சதீஷ்குமாருக்கு பெண் கேட்டு பலமுறை சென்றனர். ஆனால் பெண் கொடுக்க முன்வரவில்லை.

இதனால் இராணுவ வீரர் ஸ்ரீராமுலு  என்னுடைய ஒரே மகன் தான் என்னுடைய சொத்துக்கு வாரிசு என்றெல்லாம் ஆசை வார்த்தை கூறி திருமண ஏற்பாடு செய்தனர்.

ஆந்திர மாநிலத்தில் உள்ள காணிப்பாக்கம் கோவிலில் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பின்னர் மணமகன் சதீஷ்குமார் மனநிலை பாதிப்பு உள்ளவர் என்று அறிந்த  பெண்ணின் தாயார் லட்சுமி, மனநிலை பாதிப்பு குறித்து சதிஷ்குமார் அப்பாவிடம் கேள்வி கேட்டபொழுது, போகப்போக இரண்டு அல்லது மூன்று மாதத்தில் முழுவதும் மாறிவிடுவார் என்று சமாதானம் பேசி வீட்டுக்கு சென்றுள்ளனர்.

சில தினங்கள் பிறகு சதீஷ்குமாருடைய அப்பா ஓய்வு பெற்ற இராணுவ வீரர் தன்னுடைய மருமகளுக்கு மயக்க மருந்து கொடுத்து மயங்கிய நிலையில்  வல்லுறவுக்குட்படத்தியதாக கூறப்படுகிறது. மயக்கம் தெளிந்து சோனியா இதை குறித்து கேட்ட பொழுது,

இதை யாரிடமும் சொல்லாதே உன்னுடைய உறவினர்களிடமும் சொல்லாதே மீறி சொல்லினால் குடும்பத்தை கூண்டோடு அழித்து விடுவதாக மிரட்டியுள்ளார்.

READ MORE >>>  13 வயது சிறுமி சீரழிக்கப்பட்ட 10 இடங்கள்: ஒரு குகைக்குள் மட்டும் 60 பியர் ரின்கள்

தொடர்ந்து பலமுறை மிரட்டி ஆசையை தீர்த்துக் கொண்டார். அதனால் சோனியா கர்ப்பமடைந்து பிரசவத்திற்காக வேலூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது .பின்பு மூன்று மாதங்கள் கழித்து சோனியாவை குழந்தையும் தாக்கி உன்னுடைய வீட்டுக்கு போ எனக்கூறி இரவோடு இரவாக பொன்னை பஸ் நிலையத்தில் விட்டுவிட்டு முன்னாள் இராணுவ வீரர் சென்றுள்ளார்.

ஒரு வருடத்துக்கு மேல் ஆகியும் இதுவரை குழந்தையையும் தாயையும் கூட்டிச் செல்லாமல் இருந்துள்ளனர். இவர்களாகவே  வீட்டுக்கு சென்றால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி விரட்டி உள்ளனர். இதனால் மனமுடைந்த சோனியா அவருடைய தாயார் லட்சுமி பொன்னை  பொலில் நிலையத்தில் புகார் மனு கொடுத்தனர். மேலும் இப்பெண்ணின்நிலையை உணர்ந்து சமூக ஆர்வலர்களும் பெண்கள் அமைப்பினரும் ஆதரவு கரம் நீட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

Previous articleபெண் பொலிஸ் அதிகாரி கூட்டு பாலியல் வல்லுறவுக்கு பின் கொலை!
Next articleநீர்வீழ்ச்சி நிர்வாண கானொளி விவகாரம் இவர்கள்தானாம்!