Home jaffna news சமூகவலைத்தளத்தால் திருமண நிகழ்வில் கலந்து கொண்டோருக்கு நேர்ந்த கதி!

சமூகவலைத்தளத்தால் திருமண நிகழ்வில் கலந்து கொண்டோருக்கு நேர்ந்த கதி!

யாழ். காரைநகரில் சுகாதார நடைமுறைகளை மீறி திருமணச் சடங்கு ஒன்றில் கலந்து கொண்டவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினரின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காரைநகர், அல்வின் வீதியில் கடந்த புதன்கிழமை குறித்த திருமண நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றுள்ளது.

இந்த நிலையில் அது தொடர்பான ஒளிப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட நிலையில் சம்பவம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஒளிப்படங்களில் காணப்பட்டவர் முகக்கவசம் கூட அணிந்திருக்காத நிலையில், சுகாதாரத் துறையினர் அவர்கள் அனைவரையும் அடையாளம் கண்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  கொவிட் தொற்றால் உயிரிழந்த இளைஞன் உயிர்த்தெழுந்த அதிசயம்!
Previous articleதமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் பிளவுகள்! மாவை சேனாதிராஜா
Next articleபோதைப்பொருளுடன் சிக்கிய வெளிநாட்டு கப்பல்!