Home Local news தேங்கிக் கிடக்கும் சடலங்கள் அப்புறப்படுத்த அமைச்சர் உத்தரவு!

தேங்கிக் கிடக்கும் சடலங்கள் அப்புறப்படுத்த அமைச்சர் உத்தரவு!

நாட்டிலுள்ள மருத்துவமனைகளில் நீண்ட காலமாக தேங்கியுள்ள, அடையாளம் காணப்படாத உடல்களை அப்புறப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு அறிவுறுத்தியுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நீண்டகாலமாக மருத்துவமனைகளில் தேங்கியிருந்த உடல்கள் அனுமதியுடன் அப்புறப்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், மேலும் பல சடலங்கள் சட்ட நடவடிக்கை மற்றும் பல்வேறு காரணங்களால் சில உடல்களை மருத்துவமனைகளில் இருந்து விடுவிக்க முடியாதுள்ளதாகவும், அவற்றை விரைவில் விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

இதனையடுத்து மீதமுள்ள உடல்களை விரைவில் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படவுள்ளன. மேலும்,மருத்துவமனைகளில் தேவையற்றவாறு உடல்கள் தேங்குவதைத் தடுக்க எடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  மோட்டார் சைக்கிள் பாவனையாளரா நீங்கள்?
Previous articleபொது மயானத்திற்கு அருகில் மறைத்து வைக்கப்பட்ட ஒரு தொகுதி கஞ்சா மீட்பு!
Next articleகொவிட் தொற்றால் 202 பேர் பலி; இதுவரை 9806 பேர் உயிரிழப்பு!