Home Local news திருகோணமலை ஆபத்தை நோக்குமென எச்சரிக்கை!

திருகோணமலை ஆபத்தை நோக்குமென எச்சரிக்கை!

பொதுமக்கள் அநாவசியமாக நடமாடுவதை தவிர்த்தல் இன்றியமையாது எனத் தெரிவித்த திருகோணமலை மாவட்டச் செயலாளர் சமன் தர்சன பாண்டிகோராள, “மக்களில் பொறுப்பற்ற நடவடிக்கைகள் ஆபத்தை நோக்கிப் பயணிக்க ஏதுவாக அமையும்” என்றார்.

எனவே, தற்போதைய அபாயகர நிலையை கருத்திற்கொண்டு ஒவ்வொருவரும் செயற்படுமாறும் அவர்  வேண்டிக்கொண்டார்.

திருகோணமலை மாவட்ட கொவிட் செயலணிக் கூட்டம், மாவட்டச் செயலகத்தில், பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமாகிய கபில நுவன் அத்துக்கோராள தலைமையில் நடைபெற்றது.

இதன்போது மேலும் கருத்துரைத்த மாவட்டச் செயலாளர், “மாவட்டத்தில் உள்ள கிராமியக் குழுக்களை மேலும் வலுப்படுத்தி, வைரஸ் பரவாமல் இருக்க ஆவண செய்ய வேண்டும். இக்குழுவை வலுப்படுத்துவதன் மூலம், கிராமங்களில் வைரஸ் பரவாமல் மக்களை பாதுகாக்க முடியும்.

இக்காலப் பகுதியில் மக்கள் மிக அவதானத்துடனும் பொறுப்புடனும் செயற்படல் வேண்டும். உரிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் உரிய தரப்பினரை ஒன்றினைத்து வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  இலங்கையில் வீட்டிலேயே கொவிட் தொற்றினை கண்டுபிடிக்கும் நடைமுறை அறிமுகம்
Previous articleஅண்ணனை நம்பி தோழியை அழைத்துச் சென்ற தங்கை: பின்பு அரங்கேறிய துயரம்
Next articleகோவிட் தொற்றுக்கு இலக்காகியுள்ள பெருமளவான பொலிஸார்