Home Indian news ஆண்குழந்தைக்காக பெண்ணை நள்ளிரவில் நிர்வாணப்படுத்தி பூஜை!

ஆண்குழந்தைக்காக பெண்ணை நள்ளிரவில் நிர்வாணப்படுத்தி பூஜை!

மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டம் பிம்பிரி சின்வாட் என்ற பகுதியைச் சேர்ந்த 31 வயது பெண் ஒருவருக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.

இவர்களுக்கு இரு பெண் குழந்தைகளும் உள்ளது. இதனிடையே, அவருக்கு ஆண் குழந்தை பிறக்காததால் கணவர் குடும்பத்தினர் அந்தப் பெண்ணை தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.

மேலும் வரதட்சணை கேட்டு அவரது தாய் வீட்டிற்கும் அனுப்பியுள்ளனர். மேலும், ஆண் குழந்தை பிறப்பதற்காக கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் அந்த பெண்ணை சாமியார் ஒருவரிடமும் அழைத்துச் சென்றுள்ளனர்.

அந்த சாமியார் அவரை நிர்வாணப்படுத்தி அவர் முழுவதும் சாம்பல் மற்றும் குங்குமத்தை பூசி வினோத பூஜை செய்துள்ளனர். இதன்பின்னர் அந்த சாம்பலையே சாப்பிடவும் வைத்துள்ளார்.

இதனால் விரக்தியடைந்த அப்பெண் இதுகுறித்து போலீசில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த அந்த புகாரில் அவர் தனது கணவர் ஆண் குழந்தைக்காக தனக்கு தெரியாமல் மற்றொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகவும், தன்னை ஆண் குழந்தை வேண்டும் என கொடுமைப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனால், போலீசார் அப்பெண்ணின் கணவர் மற்றும் குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  பெண்களை நாய்களுக்கு விருந்தாக்கும் தாலிபான்கள்: கண்களை பறிக்கொடுத்த இளம் தாயாரின் கதறல்
Previous articleநிர்வாண பாலியல் வீடியோ: நடந்தது என்ன?
Next articleஅண்ணனை நம்பி தோழியை அழைத்துச் சென்ற தங்கை: பின்பு அரங்கேறிய துயரம்