Home Local news ஆய்வு பணிக்காக நோர்வே செல்லும் யாழ் மாணவி;

ஆய்வு பணிக்காக நோர்வே செல்லும் யாழ் மாணவி;

நோர்வே நாட்டின் Agder பல்கலைக்கழகத்திற்கு ஆய்வு பணிக்காக யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மாத்தளை தமிழ் பட்டதாரிகள் ஒன்றியத்தின் உறுப்பினரும், ஒன்றியத்தின் விஞ்ஞான பரீட்சைகள் மையத்தின் வளவாளருமான செல்வி. ரவீனா சுகுமாரே இவ்வாறு நோர்வேக்கு செல்லவுள்ளார்.

ரவீனா சுகுமார் யாழ் பல்கலைக்கழத்தின் இரசாயனவியல் துறையில் முதன்மை மாணவியாக தேர்வாகிய நிலையில் இந்த அரிய வாய்ப்பினை பெற்றுள்ளார். இந்த 06 மாத ஆய்வு கற்கை நெறியில் செல்வி. ரவீனா நோர்வே நாட்டு விஞ்ஞானிகளுடன் பணியாற்றவுள்ளார்.

இதேவேளை ரவீனா சுகுமார் யாழ் பல்கலைக்கழகத்தில் இரசாயனவியல் துறையின் உதவி விரிவுரையாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

இவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

Gallery

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  ராகமையில் கண்கலங்கச் செய்த சம்பவம்!
Previous article109 வயதுடைய மூதாட்டியொருவர் மரணம்!
Next articleமுகக் கவசம் அணிவது தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்