Home Local news எதிர்வரும் 17ம் திகதி 24 கைதிகள் விடுதலை.

எதிர்வரும் 17ம் திகதி 24 கைதிகள் விடுதலை.

நன்னடத்தை அடிப்படையில், நீண்ட காலம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள 24 கைதிகளை விடுதலை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 17 ஆம் திகதி 09 சிறைச்சாலைகளிலுள்ள குறித்த கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

கைதிகளை சிறந்த பிரஜைகளாக்கி சமூகமயமாக்கும் திட்டத்தின் கீழ் புனர்வாழ்வளிக்கப்பட்ட 24 கைதிகளே இவ்வாறு விடுதலை செய்யப்படவுள்ளனர்.

சிறைச்சாலைகள் முகாமைத்துவ மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வளிப்பு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தேவின் அனுமதியின் கீழ் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  யாழில் கிணற்றிற்குள் இருந்து சீறி பாயும் கடல் நீர்
Previous articleமுதலிடத்தை பிடித்தார் சாணக்கியன்!
Next articleஜனாதிபதியிடம் முருந்தெட்டுவே ஆனந்த தேரர் முக்கிய கோரிக்கை