Home Indian news பிக் பாஸ் பட்டம் வென்ற பிரபலம் திடீர் உயிரிழப்பு!

பிக் பாஸ் பட்டம் வென்ற பிரபலம் திடீர் உயிரிழப்பு!

இந்தி பிக் பாஸ் 13-வது சீசனில் பிக் பாஸ் பட்டம் வென்ற நடிகர் சித்தார்த் சுக்லா மாரடைப்பால் இன்று உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

40 வயதான நடிகர் சித்தார்த் சுக்லா இந்தி பிக் பாஸ் 13-வது சீசன் நிகழ்ச்சியில் பிக்பாஸ் பட்டத்தை வென்றவர் . அத்துடன் ஏராளமான தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ள சித்தார்த் சுக்லா,2 சினிமா படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலையில் சித்தார்த் சுக்லாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது அவர் மரணமடைந்தார்.

2008-ல் தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்க ஆரம்பித்த சித்தார்த் சுக்லா, 2014-ல் பாலிவுட்டில் அறிமுகமானார். இதெவேளை சித்தார்த் சுக்லாவின் மரணத்துக்கு பாலிவுட் பிரபலங்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  கேரள கடற்பரப்பில் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய நபர்கள் ஆயுதங்களுடன்!
Previous articleநாய் வளர்ப்பாளர்களுக்கான அறிவித்தல்!
Next articleயாழில் சீனி மூடையை திருடியவர் சிக்கினார்