Home jaffna news யாழில் 24 மணி நேரத்தில் 286 தொற்றாளர்கள் அடையாளம்!

யாழில் 24 மணி நேரத்தில் 286 தொற்றாளர்கள் அடையாளம்!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 286 கோவிட் தொற்றுக்கு இலக்கான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று அறிக்கையிடப்பட்டுள்ளது.

அவர்களில் 16 பேர் பி.சி.ஆர். பரிசோதனையிலும், 270 பேர் அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனையிலும் கண்டறியப்பட்டுள்ளனர்.

சாவகச்சேரி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 85 பேரும், யாழ்ப்பாணம் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 48 பேரும், கோப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 14 பேரும், சங்கானை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 19 பேரும், கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 41 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன் காரைநகரில் 9 பேரும், நல்லூரில் 14 பேரும், சண்டிலிப்பாயில் 8 பேரும், உடுவிலில் 11 பேரும், தெல்லிப்பழையில் 2 பேரும், பருத்தித்துறையில் 28 பேரும், மருதங்கேணியில் 4 பேரும், ஊர்காவற்றுறையில் ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 2020 மார்ச்சிலிருந்து இதுவரை 12746 பேர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் 1161 குடும்பங்களைச் சேர்ந்த 3739 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  துறைமுக அதிகார சபை ஊழியர்கள் 600 பேருக்கு கொரோனா.
Previous articleஆட்சி மாற்றத்துக்கு தயாராகும் மைத்திரி?
Next articleயாழ். மருதனாமடத்தில் வாள் வெட்டு சம்பவம்!