Home Local news சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட ஒருவர் வசமாக சிக்கினார்!

சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட ஒருவர் வசமாக சிக்கினார்!

களுத்துறை மாவட்டம், இங்கிரிய பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர்.

இதன்போது 7.5 லீற்றர் மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இங்கிரிய பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய நபரே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹொரன விசேட அதிரடிப் படையினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து, இங்கிரிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 20 ஏக்கர் பிரதேசத்தை விசேட அதிரடிப்படையினர் சுற்றிவளைத்து சோதனை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டு இங்கிரிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  இணையத்தில் கற்பிப்பதாக கூறி மாணவிகளிடம் அந்தரங்கப்படம் கேட்ட ஆசாமி கைது
Previous articleவடக்கு, கிழக்கில் கொவிட் தொற்று அதிகரிப்பு!
Next article5 நாள்கள் திட்டம் 3 நாள்களில் முடிந்தது.