Home jaffna news யாழ். போதனா வைத்தியசாலையின் விடுதிகளில் இடமில்லை.

யாழ். போதனா வைத்தியசாலையின் விடுதிகளில் இடமில்லை.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வரும் நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் உள்ள கொரோனோ சிகிச்சை விடுதிகள் நிரம்பி வழிவதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, தெல்லிப்பழை, பருத்தித்துறை மற்றும் சாவகச்சேரி வைத்தியசாலைகள் ஆகியவற்றில், கோவிட்-19 சிகிச்சைப் பிரிவுகள் அமைக்கப்பட்டு, கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருpன்றன.

இந்த நிலையில், நேற்று  (30) நிலைவரம் படி, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில், 129 தொற்றாளர்கள் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

அத்துடன், அங்கு அமைக்கப்பட்டுள்ள 2 அதிதீவிர சிகிச்சைப் பிரிவுகளில், 10 தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, கொரோனா மரணங்களும் அதிகரித்துள்ள நிலையில், தினமும் 5 சடலங்கள் யாழ். போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

மேலும், அந்தச் சடலங்கள், கோம்பயன் மணல் மயானத்தில் சுகாதார விதிமுறைகளின் கீழ் எரியூட்டப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  யாழில் 17வயது சிறுமி வீடு புகுந்து கடத்தல்! தடுக்க முற்பட்ட தாய் மீது ஏறி தப்பிய வாகனம்
Previous articleதங்கப் பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!
Next articleஊரடங்கு 14ஆம் திகதிவரை நீடிக்கப்படுகிறதா?