Home Local news 92 ரூபாய்க்கு வாங்கி 220 ரூபாய்க்கு விற்கப்படும் சீனி!

92 ரூபாய்க்கு வாங்கி 220 ரூபாய்க்கு விற்கப்படும் சீனி!

உலக சந்தை விலைப்படி ஒரு கிலோகிராம் சீனியை 92 ரூபாய்க்கு வாங்கி 98 ரூபாய்க்கு பொது மக்களுக்கு கொடுக்கலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு மார்க்ஸ் பெர்னாண்டோ மாவத்தையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

92 ரூபாய்க்கு வாங்கக்கூடிய ஒரு கிலோகிராம் சீனியை 220 ரூபாய்க்கு விற்க அனுமதித்ததற்காக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன இராஜினாமா செய்ய வேண்டும்.

இராஜினாமா செய்யாமல் பொய்யான அறிக்கைகளைத் தொடர்ந்தால், அமைச்சர் அந்த மோசடியாளர்களிடமிருந்து தரகுப் பணத்தைப் பெறுகிறார்.

ஒரு கிலோகிராம் சீனிக்கு 100 ரூபாய்க்கு மேல் இலாபம் சம்பாதிக்கிக்கும் வர்த்தகர்கள், வருடத்துக்கு சுமார் 70 பில்லியன் ரூபாய் வரை சம்பாதிக்கிறார்கள்.

அரசாங்கத்தின் தவறான நிதி மற்றும் பொருளாதார திட்டங்களால் ஒக்டோபர் மாதத்துக்குள் நாட்டில் கடுமையான பஞ்சம் ஏற்படும் அபாயம் இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  O/L பெறுபேறு வெளியீடு; அடுத்த வாரம் தீர்மானம்.
Previous articleகொவிட் மரணங்கள் 216; இதுவரை மரணித்தவர்களின் எண்ணிக்கை 8991 ஆக அதிகரிப்பு!
Next articleஇலங்கையில் கோவிட் தொற்றால் இதுவரை சுமார் 4,200 கர்ப்பிணி பெண்கள் பாதிப்பு