Home Local news திருமலையில் விசேட சீல்!

திருமலையில் விசேட சீல்!

திருகோணமலையில் மறு அறிவித்தல் வரை அனைத்து மதுபான சாலைகளுக்கும்  சீல் வைக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண மதுவரித்திணைக்கள மாகாண பணிப்பாளர் ஏ.தர்மசீலனின் பணிப்புரைக்கு அமைய திருகோணமலை மதுவரித் திணைக்கள அதிகாரி எஸ். கே. வணிகசிங்க அவர்களின் வழிகாட்டலுடன்  திருகோணமலை பிராந்தியமதுவரித் திணைக்கள பொறுப்பதிகாரி ஜானி அத்தநாயக்க குழுவினர்களினால் திருகோணமலையில் உள்ள அனைத்து மதுபான சாலைகளுக்கும்  சீல் வைக்கப்பட்டது.

மதுபான சாலைகளில்,  திருட்டுத்தனமாக மதுபான விற்றபனை நடைபெறுவதாக திருகோணமலை மதுவரித் திணைக்களத்துக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கு அமைவாக அனைத்து மதுபான சாலைகளுக்கும் கீழ் வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து  இன்று (30) பிற்பகல் முதல் மறு அறிவித்தல் வரை அனைத்து மதுபான சாலைகளுக்கும் சீல் வைக்கப்பட்டதாகவும் திருகோணமலை மதுவரித் திணைக்களத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  கோவிட் தொற்றுக்கு இலக்கானோரை சிகிச்சைக்கு உட்படுத்த இன்று முதல் புதிய முறைமை
Previous articleநாட்டு மக்களுக்கு முக்கிய தகவலை அறிவித்தார் இராணுவ தளபதி
Next articleகொவிட் மரணங்கள் 216; இதுவரை மரணித்தவர்களின் எண்ணிக்கை 8991 ஆக அதிகரிப்பு!